ஒரு போட்டியில் கூட விளையாடாமல்..டி20 தொடரை விட்டு வெளியேறும் இலங்கை வீரர்
ஹசரங்கா இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா PSL 2023 தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
PSL 2023
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் லீக்கான PSL தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட, இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
@AFP
ஆனால், மார்ச் 3ஆம் திகதி வரை மட்டுமே 6 ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டிருந்தார். ஏனெனில், மார்ச் 4ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும்.
இருப்பினும் ஹசரங்கா இந்த சீசனில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் சுழற்பந்து வீச்சாளர் கயிஸ் அகமது விளையாடினார்.
நியூசிலாந்து தொடர்
இந்த நிலையில், பணிச்சுமை ஏற்படும் என்பதால் வனிந்து ஹசரங்கா PSL 2023 தொடரில் வெளியேறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட முன்னுரிமை கொடுத்தாலும், இலங்கை உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் மீது கணிசமான அழுத்தம் உள்ளது.
எனவே PSL 2023-யின் முன்னுரிமை பட்டியலில் அவர் முன்னுரிமை அளிப்பது குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.