மேகன் சொல்வது பொய்... தந்தை வெளியிட்டுள்ள ஆதாரங்கள்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் தொடர்ந்து பலதரப்பிலும் சர்ச்சையை உருவாக்கிவரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள கூற்று ஒன்றை மறுத்துள்ளார் மேகனுடைய தந்தையாகிய தாமஸ் மார்க்கல்.
மேகன் சொல்வது பொய்
அந்த நெட்ப்ளிக்ஸ் தொடரில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் பொய் என பலரும் கூறிவரும் நிலையில், அவர் சொல்லியிருக்கும் ஒரு விடயம் பொய் என மேகனுடைய தந்தையே கூறியுள்ளார்.
ஹரி மேகன் திருமணம் செய்ய இருந்த நேரத்தில், தனது தந்தையை 20 முறை மொபைலில் தான் அழைத்ததாகவும், தன் தந்தை பதிலளிக்கவும் இல்லை என்றும் கூறியிருந்தார் மேகன்.
அதற்குப் பிறகுதான் உண்மை தெரியவந்தது,மேகனின் தந்தை தாமஸ் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
Image: GB News
அதைத் தொடர்ந்து மேகன்
அவரது தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், நான் உங்களை பல முறை மொபைலில் அழைத்தேன், ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை, உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? எந்த மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார் மேகன்.
அத்துடன், 20 முறை உங்களை அழைத்தேன், நீங்கள் பதிலளிக்கவேயில்லை, தயவு செய்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை நிறுத்தமுடியுமா? எங்களுக்கு வேதனைதான் அதிகமாகிறது, நாங்கள் உங்கள் மீது கோபமாக இல்லை, ஆனால், நானும் ஹரியும் உங்களூடன் பேச விரும்புகிறோம் என்று அந்த குறுஞ்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்திருந்த தாமஸ், தனது குறுஞ்செய்தியில், மேகன், உனக்கு வேதனையை உண்டாக்கும் எதையும் நான் செய்யவில்லை, என்னை நீ 20 முறை மொபைலில் அழைத்தது எனக்குத் தெரியாது, நான் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
Image: Netflix / BACKGRID
மேகன் அளித்திருந்த விளக்கம்
அந்த குறுஞ்செய்திகள் தன் தந்தை அனுப்பியதே அல்ல என்று கூறியுள்ள மேகன், அவர் தன்னை மெக் என்றுதான் அழைப்பார் என்றும், மேகன் என்று அழைக்கமாட்டார் என்றும், ஆகவே அவரது மொபைலை யாரோ எடுத்து தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தனது நெட்ப்ளிக்ஸ் தொடரில் கூறியிருந்தார்.
ஆனால், மேகன் சொல்வது உண்மையில்லை என்று கூறியுள்ள தாமஸ், தான் இதற்கு முன்பும் மேகனை மேகன் என அழைத்துள்ளதாகவும், தன் மொபைலை யாரும் எடுக்கவில்லை, தன் மொபைலும், தான் அனுப்பிய செய்திகளும் தன்னிடம்தான் உள்ளன என்றும், தனக்கு ஏதாவது பெரிய பிரச்சினை என்றால் மட்டும், தான் மேகனை அழைக்கும்போது மெக் என்று அழைக்காமல், மேகன் என்று அழைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Image: Netflix
Image: GBNews / YouTube