விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் சிலம்பரசன்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் விராட் கோலி.
தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடியேறி விட்ட விராட் கோலி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதால் இந்தியாவில் இருக்கிறார்.
விராட் கோலி சிலம்பரசன்
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலியிடம், நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
அதற்கு, சிலம்பரசன் நடித்த 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக பதிலளித்தார்.
அது தொடர்பான வீடியோவை பகிர்ந்த சிலம்பரசன், கோலியை நீ சிங்கம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பரசன் மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது தனித்துவ beard (தாடி) ஸ்டைல்களுக்குப் பிரபலமானவர்கள்.
இதே போல், இருவரும் பல வகைகளில் ஒன்றாக தோற்றமளிக்கும் நிலையில், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி மற்றும் சிலம்பரசன் இதற்கு விருப்பம் தெரிவித்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |