பிரபல நடிகையை திருமணம் செய்ய உள்ள நடிகர் விஷால்?
தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையை, நடிகர் விஷால் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷால், அதன் பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி என பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
விஷாலுக்கு 47 வயதாகி விட்ட நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள அவர், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்திருந்தார்.
தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், திருமணம் குறித்து பேசிய விஷால், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு பின்னர் தனது திருமணம் இருக்கும் என தெரிவித்தார்.
நடிகை சாய் தன்ஷிகா
விஷால் காதலித்து வரும் பெண் யார் என, கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை சாய் தன்ஷிகாதான் விஷால் காதலித்து வரும் பெண் என தகவல் வெளியாகியுள்ளது.
சாய் தன்ஷிகா நடிப்பில் வெளியாக உள்ள ‘யோகி டா’ திரைப்பட விழா, இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில், விஷால் – தன்ஷிகா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூரை சேர்ந்த, 35 வயதான சாய் தன்ஷிகா, பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |