இளவரசர் வில்லியம் மன்னராக பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா?
பிரித்தானியாவின் அடுத்த மன்னர் இளவரசர் வில்லியம்தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் ஹரி கலந்துகொள்வாரா என்பது குறித்த கருத்துக்கள் பரவத் துவங்கியுள்ளன.
பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா?
விடயம் என்னவென்றால், இளவரசர் வில்லியம் மன்னராக பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா என்பதைவிட, ஹரிக்கு வில்லியம் அழைப்பிதழ் கொடுப்பாரா என்பதே சந்தேகம்தான் என்கின்றன சில ஊடகங்கள்.
இந்நிலையில், வில்லியம் ஹரி உறவைப் பொருத்தவரை, அது முடிந்துபோன விடயம் என்றே நினைக்கிறேன் என்கிறார் ராஜ குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு ஹரி அளித்த பேட்டி ஒன்றில், நான் என் குடும்பத்துடன் ஒப்புரவாக விரும்புகிறேன், வாழ்க்கை விலையேறப்பெற்றது, இனியும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இனி மன்னர் சார்லஸ் தன்னுடன் பேசமாட்டார் என்றும் கூறியுள்ளார் ஹரி.
இந்நிலையில், ராஜ குடும்பத்தின் நண்பரும் எழுத்தாளருமான Hugo Vickers என்பவர், ஹரியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தாகவேண்டும் என விதி எதுவும் இல்லை என்கிறார்.
ஆக, வில்லியம் என்ன நினைக்கிறாரோ அதை அவர் செய்யலாம் என்கிறார் அவர்.
அதே நேரத்தில், வில்லியம் ஹரியை தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்கமாட்டார் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை மேற்கோள் காட்டி Page Six என்னும் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |