இங்கிலாந்து லயன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து லயன்சிற்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டி
தென் ஆப்பிரிக்க ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அருண்டேலில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 157 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 331 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 387 ஓட்டங்கள் குவித்ததால், தென் ஆப்பிரிக்க அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஹெர்மன், ஹம்ஸா அரைசதம்
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸோர்சி 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, லெசேகோ 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து கைகோர்த்த ஜோர்டன் ஹெர்மன் (Jordan Hermann), ஸுபைர் ஹம்ஸா (Zubayr Hamza) கூட்டணி அணியை வெற்றி பெற வைத்தது.
ஹெர்மன் 70 ஓட்டங்களும், ஹம்ஸா 54 ஓட்டங்களும் எடுத்தனர். ஸ்டான்லி, எடி ஜேக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |