இலங்கை அணியை வீழ்த்தி ODI தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
பல்லேகலேயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா A கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி (2-1) தொடரை கைப்பற்றியது.
173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா A அணி 35.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (55 பந்துகளில் ஆட்டமிழக்காமல்) 58 ஓட்டங்கள் மற்றும் செனுரன் முத்துசாமி (55 பந்துகளில் ஆட்டமிழக்காமல்) 45 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
@ProteasMenCSA
முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் முத்துசாமி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா A அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
@ProteasMenCSA
இரு நாடுகளும் இப்போது தம்புள்ளையில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் சந்திப்பு ஜூன் 12-15 வரையிலும், இரண்டாவது சந்திப்பு ஜூன் 19-22 வரையிலும் நடைபெறும்.
Twitter@ThePapareSports