வங்காளதேசம் நிர்ணயித்த 12 ஓட்டங்கள் இலக்கு: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
South africa beat bangladesh by 9 wickets: வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
சுருண்ட வங்காளதேச அணி
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் வங்காளதேசம் 400 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 557 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. லித்தன் தாஸ் 39 ஓட்டங்களும், மஹ்ஃபிஜூல் இஸ்லாம் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரபாடா ஆட்ட நாயகன்
சைமன் ஹார்மர் (Simon Harmer) 6 விக்கெட்டுகளும், ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜென்சென் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 12 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை தென் ஆப்பிரிக்க அணி 1.3 ஓவர்களில் எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரைசதம் மற்றும் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் ககிஸோ ரபாடா (Kagiso Rabada) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

