டி20 உலகக்கிண்ணத்தில் வெளியேற்றிய நியூஸிலாந்து..அதன் சொந்த மண்ணிலேயே பழிதீர்த்த தென் ஆப்பிரிக்கா
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்
பே ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து 91 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 21 பந்துகளில் 26 ஓட்டங்களும், சான்ட்னர் மற்றும் மெக்கோன்சி தலா 15 ஓட்டங்களும் எடுத்தனர். அபாரமாக பந்துவீசிய நோபாணி மோகோயனா 26 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு நியூஸிலாந்து அணி நெருக்கடி கொடுத்தாலும், அறிமுக வீரர் கான்னர் எஸ்டர்ஹுய்சென் (Connor Esterhuizen) நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கான்னர் எஸ்டர்ஹுய்சென் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்), டியான் ஃபாரெஸ்டர் 16 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |