2வது இன்னிங்ஸில் சொற்ப ரன்களுக்கு சுருண்டது இந்தியா! தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 , Centurion மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் சதத்தால் 327 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து முதலி இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது.
இன்று நான்காவது நாள் 2வது இன்னிங்ஸில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மயங்க் அகர்வால் (4), கே.எல்.ராகுல் (23), தாக்கூர் (10), புஜாரா (16), கோலி (18), ரகானே (20), அஸ்வின் (14), ரிஷப் பண்ட் (34), முகமது ஷமி (1), சிராஜ் (0) ரன்களில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Marco Jansen bringing the magic on debut? #SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/7cYIorUwsY
— Cricket South Africa (@OfficialCSA) December 29, 2021
தென் ஆப்பிரிக்கா தரப்பில் பந்து வீச்சில் ரபாடா, ஜேன்சன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். என்கிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
? CHANGE OF INNINGS
— Cricket South Africa (@OfficialCSA) December 29, 2021
?? India have set 304 for Dean Elgar's men to earn victory in the first Betway Test match.
Kagiso Rabada 4/42
Marco Jansen 4/55#SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/OjZnrmySwh
நான்காவது ஆட்டம் முடிய இன்னும் 51 ஓவர்கள் இருக்கும் நிலையில் 305 எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.