இறுதி பந்துவரை திக் திக்! நேபாளத்திடம் போராடி 1 ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
நேபாளம் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஷால் புர்டெல் மிரட்டல் பந்துவீச்சு
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டி காக் 10 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க்ரம் (15), கிளாசென் (3) ஆகியோர் குஷால் புர்டெலின் துல்லியமான பந்துவீச்சில் நடையை கட்டினர்.
எனினும் பொறுப்புடன் ஆடிய ரீஸா ஹென்றிக்ஸ் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 7 ஓட்டங்களில் வெளியேற, ஸ்டப்ஸ் அதிரடியாக 18 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் விளாசினார்.
தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 115 ஓட்டங்கள் எடுத்தது. குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகளும், திபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
த்ரில் வெற்றி
பின்னர் ஆடிய நேபாள அணியில் ஆசிஃப் ஷெய்க் அபாரமாக ஆடி 42 (49) ஓட்டங்கள் எடுத்தார். எனினும் ஷம்ஸி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதிவரை ஓவர் போட்டி சென்றதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 6 பந்துகளில் 8 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில், ஆனால் குல்ஸன் ஜாவின் மிரட்டலான பந்துவீச்சில் நேபாளம் அணி 6 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. ஷம்ஸி 19 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
?? RESULT | #SAvNEP
— Proteas Men (@ProteasMenCSA) June 15, 2024
It doesn’t get any closer than that.
4 wins in 4 matches. ✅#WozaNawe #BePartOfIt #OutOfThisWorld #T20WorldCup pic.twitter.com/roSxx5AryA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |