தனக்கு தானே ஆப்புவைத்துக் கொண்ட இத்தாலி: உலககோப்பையிலிருந்து வெளியேறியது
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் A முதல் H வரை எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு நான்கு அணிகள் வீதம் 32 அணிகள் இந்த உலகக்கோப்பையில் விளையாடுகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் நைஜிரியா, டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆகிய பதினோரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியில் இத்தாலி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. போட்டி ஆரம்பித்த பதினோராவது நிமிடத்திலே கோலடித்த இத்தாலி அணி, சிறிது நேரத்தில் இத்தாலி அணி வீராங்கனை துருதிஷ்டவசமாக பெனெடெட்டா ஒர்சி தன் பக்கமே சொந்த கோலடிக்க போட்டி 1-1 என சமமானது.
அடுத்து இரண்டாவது பாதியில் தென் ஆப்பிரிக்கா இரண்டு கோலும் இத்தாலி ஒரு கோலும் அடிக்க போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3-2 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இத்தாலி அணி அடித்த சொந்த கோலால் இந்த போட்டியில் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.