சிக்ஸர்மழையில் 33 பந்துகளில் 75 ரன் விளாசல்: நியூசிலாந்தை வீழ்த்தி..தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
எஸ்தர்ஹய்ஸன் 75 ஓட்டங்கள்
தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

கொன்னோர் எஸ்தர்ஹய்ஸன் (Connor Esterhuizen) 33 பந்துகளில் 75 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார்.
நியூஸிலாந்து தோல்வி
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.

பெவோன் ஜேக்கப்ஸ் 19 பந்துகளில் 36 ஓட்டங்களும், டிம் ராபின்ஸன் 20 பந்துகளில் 25 ஓட்டங்களும் எடுத்தனர். கோட்ஸி, முல்டர் மற்றும் பார்ட்மன் தலா 2 விக்கெட்டுகளும், மஹாராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. கொன்னோர் எஸ்தர்ஹய்ஸன் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |