இந்திய அணியை களங்கடித்த டேவிட் மில்லர்: அபார வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா அணி!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, அதன் முதல் டி-20 போட்டியை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று விளையாடியது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், நாணய சுழற்றியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங்கில் களமிறங்க அழைத்தது.
இதனைத் தொடர்ந்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷான் 48 பந்துகளில் 76 ஓட்டங்கள் அதிரடியாக குவித்து, அணியின் மொத்த ஒட்டங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தார்.
ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜ் வீசிய 12 வது ஓவரின் 6 பந்தில் இஷான் கிஷான் கேட்ச் கொடுத்து அவுட்னார்.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட், மற்றும் பாண்டியா ஆகியோர் சிரான ஓட்டங்களை குவிக்கவே, இந்திய அணி 20 ஓவர்கள் மூடிவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 211 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 212 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டி-காக், கேப்டன் தேம்பா பாவுமா, மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
இருப்பினும் களத்தில் அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இந்திய அணி வீரர்களின் பந்துகளை நாலாப்பக்கமும் சிதறடிக்கவே தென்னாப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.
ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 46 பந்துகளில், 75 ஓட்டங்களும், டேவிட் மில்லர், 31 பந்துகளில் 64 ஓட்டங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்கான 212 ஓட்டங்களை 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து தனது அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிராக தடுப்புச் சுவர்:பின்லாந்து அரசு அதிரடி!
இக்கட்டான நிலையில் அதிரடியாக விளையாண்டு அணியை வெற்றி பெற செய்த டேவிட் மில்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாவது டி-20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை 12ம் திகதி கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் வைத்து இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.