10 சிக்சர்கள் பறக்கவிட்ட டிகாக்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை கைபற்றிய தென்னாப்பிரிக்கா
வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் VS தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது.
நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
Quinton de Kock leads the Proteas to a series victory over West Indies 🇿🇦🌴#SAvWI | #SSCricket pic.twitter.com/nZq5gyBMNC
— SuperSport 🏆 (@SuperSportTV) January 29, 2026
இதையடுத்து செஞ்சூரியனில் 2வது டி20 போட்டி நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 221 ஓட்டங்கள் குவித்து.
தொடரை கைபற்றிய தென்னாப்பிரிக்கா
222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 49 பந்துகளில் 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 115 ஓட்டங்கள் குவித்தார்.
Tough night at the SuperSport Park. #SAvWI | #MenInMaroon pic.twitter.com/PYnG8kE9Js
— Windies Cricket (@windiescricket) January 29, 2026
மறுமுனையில், ரியான் ரிக்கல்டன் 36 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 17.3 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 225 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றி அசத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |