இலங்கை அணி வாஷ்அவுட்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா முதலிடம்
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ஓட்டங்களும், இலங்கை அணி 328 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 317 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 238 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனதால், தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |