ஸ்டம்புகளை எட்டி உதைத்த தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன்: 15% அபராதம் விதித்த ஐசிசி!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிளாசனுக்கு ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
கிளாசனுக்கு அபராதம்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன்(heinrich klaasen), சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தை சேதப்படுத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஒருநாள் போட்டியில், கிளாசன் 97 ஓட்டங்கள் குவித்து இருந்தார், தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்ய 3 ஓட்டங்களே மீதம் இருந்த நிலையில் கிளாசன் விக்கெட் பறிகொடுத்தார்.
அத்துடன் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாமல் போனதால் விரக்தியில் கிளாசன் தன்னுடைய கால்களால் ஸ்டம்புகளை உதைத்துத் தள்ளினார்.
இந்த காட்சிகள் இணையத்தில் பரவி விவாதங்களை உருவாக்கியது.
இந்நிலையில் கிளாசனின் செயல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் அவரது போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான் வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 329 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தனர்.
பதிலுக்கு தென்னாப்பிரிக்க அணியில் கிளாசன் தீவிர முயற்சி செய்த போதிலும் தென்னாப்பிரிக்க அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |