பிரித்தானியாவில் இருவருக்கு தென் ஆப்பரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு தென் ஆப்பரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
லண்டனின் தென்மேற்கில் உள்ள Surrey பகுதியில் வசிக்கும் இருவருக்கே தென் ஆப்பரிக்கா கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் பயணம் செய்தவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்பதால், அப்பகுதி உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Surrey-ன் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டாயம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தி புதிய சோதனை திட்டத்தின் மூலம் புதிய தென் ஆப்பரிக்கா கொரோனாவின் எந்தவொரு சமூக பரவலையும் உன்னிப்பாகக் கண்காணிக்கவும், மேலும் பரவுவதை கட்டுப்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.