பிரான்சில் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் அதிகரிப்பு... இந்திய வைரஸ் இதுவரை இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர்
பிரான்சில் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதாகவும், இதுவரை இந்திய கொரோனா வைரஸ் பிரான்சுக்குள் நுழையவில்லை என்றும் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரான்சில் கொரோனா நிலைமை குறித்து விளக்கிய பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran, இந்த வாரம் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கொரோனா நோயாளிகளில் 6 சதவிகிதம் பேருக்கு தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் காணப்படுவதாகவும், குறிப்பாக, பாரீஸ் பகுதியில் 10 சதவிகிதம் அளவுக்கு அந்த தொற்று காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இதுவரை இந்திய வகை கொரோனா வைரஸ் பிரான்சுக்குள் நுழைந்ததாக உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.