இட்லி, தோசையின் சுவையை அதிகரிக்கும் வடகறி; சென்னை சுவையில் செய்வது எப்படி?

Idli
By Kirthiga May 13, 2024 11:30 AM GMT
Report

தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் பிரதான உணவாக பெரும்பலான மக்களால் விரும்பப்பட்டு இருப்பது வடகறி தான்.

இது ஒரு பிரபலமான தென்னிந்திய கறியாகும். முக்கியமாக பூரி, இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது.

40 வயதிலும் முடி கட்டுக்கடங்காமல் வளர தேங்காய் பால் போதும் - எப்படி பயன்படுத்தலாம்?

40 வயதிலும் முடி கட்டுக்கடங்காமல் வளர தேங்காய் பால் போதும் - எப்படி பயன்படுத்தலாம்?

அந்தவகையில் சென்னை மக்களால் செய்யப்படும் இந்த சுவையான வடகறியை எப்படி நீங்களும் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு - 200 கிராம்
  • காய்ந்த மிளகாய் - 3
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய்
  • பிரியாணி இலை - 2
  • கிராம்பு
  • பட்டை
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • அன்னாசிப்பூ - 1
  • வெங்காயம் - 2 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 5 கீறியது
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • தக்காளி - 2 நறுக்கியது
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • தண்ணீர்
  • கொத்தமல்லி இலை - நறுக்கியது

இட்லி, தோசையின் சுவையை அதிகரிக்கும் வடகறி; சென்னை சுவையில் செய்வது எப்படி? | South Indian Special Vada Curry Recipe In Tamil

செய்முறை

1. நன்கு கழுவிய கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

3. அடுத்து ஒரு பானில் அரைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுக்கவும்.

4.பின்பு ஒரு கடாயில் எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து கலந்து விடவும்.

5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

6. வெங்காயம் பொன்னிறமானவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து கலந்து விடவும்.

7. தக்காளி வெந்தவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.

8. அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும்.

10. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு எடுத்தால் சுவையான வடகறி தயார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US