தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்கும் தென்கொரிய நிறுவனம்
தென்கொரிய நிறுவனமானது தங்களுடைய கப்பல் கட்டும் நிலையத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
தென்கொரியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான ஹெச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (South Korea’s HD Hyundai Heavy Industries (HHI)) இந்தியாவில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள எந்தெந்த பகுதிகளில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்கலாம் என்று நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வந்தனர்.
பின்னர், தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
தற்போது இந்தியாவில் எல்&டி நிறுவனம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் நிலையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் ஹூண்டாய் நிறுவனம் கூட்டு சேர்ந்து கப்பல் கட்டும் தளத்தை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தென் கொரியாவின் HD Hyundai Heavy Industries (HHI) நிறுவனமானது உலகளாவிய சந்தைப் பங்கில் 10 சதவிகிதம் கப்பல் கட்டும் கட்டுமானத்தை கொண்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க படியாகும்.
தமிழ்நாடு தவிர ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான இடங்களை நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2023 டிசம்பர் மாதம் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் டி.கே தலைமையிலான இந்தியக் குழுவானது தென்கொரியாவுக்கு சென்று இந்தியாவில் நிலையத்தை அமைக்க அழைப்பு விடுத்தது. இதனடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |