லண்டனில் இந்திய இளைஞரின் வெறிச்செயல்... பரிதாபமாக பலியான நபர்: வெளியான புகைப்படம்
தெற்கு லண்டனில் பெக்காம் தெருவில் உடன் தங்கியிருந்த நபரால் கொடூரமாக குத்திக்கொல்லப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்ததுடன், புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவை சேர்ந்தவர்
குறித்த கொலை வழக்கில் இந்தியரான 25 வயது சல்மான் சலீம் என்ற இளைஞர் கைதாகியுள்ளார். கத்திக்குத்து காயங்களால் மரணமடைந்த 38 வயது அரவிந்த் சசிகுமார் இந்திய மாநிலம் கேரளாவை சேர்ந்தவர் எனவும், இவரை கத்தியால் தாக்கிய நபரும் அதே கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்துள்ளது.
Credit: onmanorama
இவர்கள் ஒரே குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர். இவர்களுடன் மேலும் இருவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது அரவிந்த் சசிகுமார் மற்றும் சல்மான் சலீம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குவாதத்தின் இறுதியில், சல்மான் சலீம் கத்தியால் அரவிந்த் சசிகுமார் மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை 1.36 மணிக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், அரவிந்த் சசிகுமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சல்மான் சலீம் கைது செய்யப்பட்டு குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கான விசாவில்
ஜூன் 20ம் திகதி மீண்டும் ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். மாணவர்களுக்கான விசாவில் லண்டன் வந்துள்ள அரவிந்த் சசிகுமார், கடந்த 10 ஆண்டுகளாக பிரித்தானியாவில் குடியிருந்து வருகிறார்.
Credit: mylondon
திருமணம் செய்துகொள்ளாத இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடனையே குடியிருப்பு ஒன்றில் தங்கி வந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது.
இதனிடையே, உடற்கூறு ஆய்வில், மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காரணத்தாலையே அரவிந்த் சசிகுமார் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |