இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதி மொத்தமும்... சுற்றுச்சூழல் செயலாண்மை வெளியிட்ட அறிவிப்பு
இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்தாலும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை நிரப்ப போதுமானதாக இல்லை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40°C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது
தென்மேற்கு இங்கிலாந்து முழுவதும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதாக சுற்றுச்சூழல் செயலாண்மை அறிவித்துள்ளது.
ஏறக்குறைய 90 ஆண்டுகளில் இல்லாத வறண்ட கால நிலைகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இந்த கோடையில் பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40°C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
@getty
பிரிஸ்டல், சோமர்செட், டோர்செட், தெற்கு க்ளௌசெஸ்டர்ஷைர் மற்றும் வில்ட்ஷயர் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்தாலும், நமது ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை நிரப்ப போதுமானதாக இல்லை என சுற்றுச்சூழல் செயலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வெசெக்ஸ் பகுதி முழுவதும் ஆற்றின் நீர் மட்டம் முன்னெப்போதும் இன்றி குறைவாக உள்ளது. கார்ன்வாலின் மிகப்பெரிய ஏரி மற்றும் நீர்த்தேக்கத்தில், முன்பு நீரில் மூழ்கிய பழைய மரங்கள் மற்றும் பாறைகள் தற்போது காய்ந்து போன சேற்றில் காணப்படுகின்றன.
900 ஏக்கருக்கும் அதிகமான போட்மின் மூர் உள்ள கோலிஃபோர்ட் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரமும் வறண்ட வானிலையே காணப்படும் எனவும், சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.