5 கேட்ச்களை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா! அதை பயன்படுத்தாமல் டி20 போட்டியில் தோற்ற இலங்கை அணி... சந்திமாலின் அபார ஆட்ட வீடியோ
இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது.
குவிண்டன் டீ காக்கிற்கு ஒரு எல்.பி. நாட் அவுட்டை ரிவியூ செய்து இலங்கை கேப்டன் ஷனகா ரிவியூவை இழந்தார், ஆனால் அடுத்து ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன யார்க்கரில் டி காக் கேட்ச் ஆனார், ஆனால் இதை ரிவியூ செய்யாமல் விட்டார் ஷனகா.
அப்போது டீ காக் 4 ரன்களில் இருந்தார், அதன் பிறகு அவர் 36 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை இலக்கை துரத்திய போது கேப்டன் கேஷவ் மகராஜ் 1 விக்கெட்டுக்கு 19 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார்.
Dinesh Chandimal's 66* | 1st T20I #SLvSA @chandi_17
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 11, 2021
Full Highlights➡️ https://t.co/vt7jmJz8AZ pic.twitter.com/ypTwToUaP5
மேலும் இலங்கை சீரான இடைவெளிகளில் விக்கெட்டைப் பறிகொடுத்தது, அவிஷ்கா பெர்னாண்டோ 11 ரன்னில் ரன் அவுட் ஆனார். பனுகா ராஜபக்சவை மகராஜ் டக் அவுட் செய்தார்.
சந்திமால் சிறப்பாக ஆடி தன் முந்தைய டி20 அதிகபட்ச ஸ்கோரான 58 ரன்களைக் கடந்து 66 ரன்கள் 54 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் இதில் அடங்கும். ஏகப்பட்ட டாட்பால்கள் இலங்கையைக் காலி செய்ய கடைசியில் கொத்தாக விக்கெட்டுகளை இழக்க 28 ரன்கள் குறைவாக எடுத்து இலங்கை தோல்வி கண்டது, ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை பேட்டிங் ஆடிய போது தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐந்து கேட்சுகளை தவறவிட்ட போதிலும் அதை இலங்கை வீரர்கள் பயன்படுத்தி கொள்ளாமல் கோட்டைவிட்டதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.
South Africa win by 28 runs to take a 1-0 lead in the 3-match series.#SLvSA pic.twitter.com/euuR81awi7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 10, 2021