தென்னாப்பிரிக்காவுடனான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி! வீணாய் போன இலங்கை வீரரின் அதிரடி ஆட்டம்... வீடியோ காட்சி
இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக போட்டியானது 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 47 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களை எடுத்தது.
A ? from Malan and a fifty from Hendricks help South Africa post 283/6 off their 47 overs.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 4, 2021
Can ?? chase this down and make it 2-0? ?#SLvSA pic.twitter.com/D7vSQFQOrK
தென்னாபிரிக்க அணி சார்பில், மாலன் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 121 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணி 25 ஓவர்களுக்கு 114 ரன்களை பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
After a short rain delay, match will resume in 2 minutes!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 4, 2021
Revised target ▶️ 265
Overs ▶️ 41#SLvSA pic.twitter.com/PDdOeCXWgH
இதன் பின்னர் டக்வெத் லூயிஸ் முறையில் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணியின் வெற்றியிலக்கு 265 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ரன்களை மட்டுமே பெற்று 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலன்க 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 77 ரன்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்றும்.
South Africa win the 2nd ODI by 67 runs and level the series 1️⃣-1️⃣.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 4, 2021
We will look to bounce back in the Third ODI, on 7th September. #SLvSA pic.twitter.com/pcA0SnJr7n