மேற்கு லண்டனில் நடந்த கத்திக்குத்து: இந்திய இளைஞர் உயிரிழப்பு: 20 வயது இந்தியர் கைது
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குர்பேஜ் சிங் என்ற இந்திய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
லண்டனில் இந்தியருக்கு கத்திக்குத்து
லண்டனின் சவுத்தால்(Southall) பகுதியில் உள்ள நார்த் சாலையில் ஜூன் 10ம் திகதி அதிகாலை குர்பேஜ் சிங் மற்றும் 30 வயதுடைய மற்றொரு நபர் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது.
கத்திக்குத்து காயத்தால் மிகவும் அவதியடைந்த குர்பேஜ் சிங் என்ற 26 வயது இந்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம்
தாக்குதல்தாரி கைது
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 20 வயது இந்திய இளைஞரான நவ்ஜோத் சிங் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது மெட்ரோபொலிட்டன் காவல்துறை வழங்கிய தகவல்படி, சந்தேக நபரான நவ்ஜோத் சிங் மீது கொலை மற்றும் கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் ஆகிய தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நவ்ஜோத் சிங் வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை அவர் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |