இது மட்டும் நடந்தா இந்தியா நிலைமை கஷ்டம் தான்! உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி காலநிலை முக்கிய ஹீரோவாக விளங்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் சுழற்பந்து விச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் வரும் 18-ஆம் திகதி சவுத்தம்டனில் உள்ள ஏஜெஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளுமே தீவிரமாக தயாராகி வருகின்றன.
குறிப்பாக இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதால், இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர், இப்போட்டி சவுத்தம்டனில் நடப்பதால், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில், இறுதி போட்டி நடக்கும் நாட்கள் அங்கு மழைக்கால நாட்கள், அப்படி வானிலை குளிர்ச்சியாக இருந்தால், அது இந்தியாவுக்கு தான் கஷ்டம், ஏனெனில் இது போன்ற காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிடும்.
இதனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும், அதுவே வெயில் அடித்துவிட்டால் இது இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.