Southampton vs Preston: தீ விபத்து காரணமாக சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு!
சென்ட் மேரிஸ் மைதானத்தின் அருகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சவுத்தாம்ப்டன் vs பிரிஸ்டன் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத திடீர் சம்பவம்
சவுத்தாம்ப்டன் FC-யின்(Southampton FC) சொந்த மைதானமான சென்ட் மேரிஸ் மைதானம்(St. Mary's Stadium) அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, பிரிஸ்டன் நார்த் எண்ட்(Preston North End) அணிக்கு எதிராக இன்று (மார்ச் 6, 2024) மாலை நடைபெற இருந்த சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தை ஒட்டிய சில மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து, போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏற்பட்டுள்ளது.
மேலும் புகை மண்டலம் காரணமாக ஸ்டேடியத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
கால்பந்து போட்டி ஒத்திவைப்பு
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆங்கில கால்பந்து லீக் (English Football League, EFL) அதிகாரிகளும், இரண்டு கால்பந்து கிளப்களும் அறிவித்துள்ளன.

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை
போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள், பணத்தை திரும்பப் பெறுவது அல்லது போட்டி மறுமுறை நடத்தப்படுவது குறித்த தகவல்களுக்கு சவுத்தாம்ப்டன் FC-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |