ஸ்டப்ஸ், ஸ்டோய்னிஸின் ருத்ரதாண்டவம்: வெற்றியுடன் வெளியேறிய சௌதர்ன் பிரேவ்
Southern Brave win against Trent Rockets: ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில் சௌதர்ன் பிரேவ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
நாட்டிங்காமில் நடந்த the Hundred போட்டியில், சௌதர்ன் பிரேவ் அணி ஸ்டப்ஸ், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடியில் ட்ரென்ட் ராக்கெட்ஸை வீழ்த்தியது.
158 ஓட்டங்கள்
சௌதர்ன் பிரேவ், ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்கு இடையிலான the Hundred போட்டி நாட்டிங்காமின் ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்தது. முதலில் ஆடிய ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.
மிட்சேல் சான்ட்னர் 35 (23) ஓட்டங்களும், கிரேகோரி 28 (18) ஓட்டங்களும் எடுத்தனர். டேனியல், ஸ்டோய்னிஸ், ஜோர்டான், ரஷீத் மற்றும் நிகில் சௌத்ரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.
ஸ்டப்ஸ் ஆட்டநாயகன்
இந்தக் கூட்டணியின் மூலம் சௌதர்ன் பிரேவ் 97 பந்துகளில் 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஸ்டப்ஸ் 28 பந்துகளில் 52 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 46 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.
இந்த வெற்றியுடன் சௌதர்ன் பிரேவ் தொடரைவிட்டு வெளியேறியது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |