பிரான்சில் பயங்கரமாக பரவும் காட்டுத்தீ... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
தெற்கு பிரான்சில் காட்டுத்தீ பயங்கரமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தெற்கு பிரான்சிலுள்ள Saint-Tropez என்ற நகரத்தில் காட்டுத்தீ பயங்கரமாக பரவிக்கொண்டிருப்பதாகவும், அதை அணைக்கும் முயற்சியில் சுமார் 750 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அதீத வெப்பமும் பலத்த காற்றும் தீயை அணைப்பதற்கு பெரும் இடையூறை ஏற்படுத்திவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். தீ இன்னமும் பயங்கரமாக எரிந்துகொண்டிருந்தாலும், யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கிரீஸ், துருக்கி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்ஜீரியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் இப்போது பிரான்சும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Les 700 #pompiers engagés sur le terrain poursuivent leurs actions de lutte sur tous les fronts au cœur de la nuit.
— Sapeurs Pompiers VAR (@SDIS83) August 17, 2021
Le feu a parcouru 22 km depuis son départ. Un #engagement sans faille pour préserver des vies et protéger des habitations ainsi que nos forêts.@Prefet83 @DLain83 pic.twitter.com/w1FXeMPewp
?? 17/08/2021 à 00h45 #DIRECT : En plein cœur du violent incendie dans les #Maures(83) avec nos soldats du feu qui font un travail exceptionnel ! Grand courage à vous, on pense à vous ! Un grand merci à Anthony Stabile pour ce partage. #Var #Incendie #Meteo83 pic.twitter.com/XyMO56bah9
— Météo Côte d'Azur ☀️ (@MeteoCotedAzur) August 16, 2021
Gros stress #incendie @VilleLaXValmer pic.twitter.com/qkyhWkaYkn
— Agnès ? (@annevache) August 16, 2021