கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென் பிரான்ஸ்: 300,000 பேர் பாதிப்பு
ஐரோப்பா முழுவதுமே வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்துவரும் நிலையில், தென் பிரான்ஸ் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
300,000 பேர் பாதிப்பு
2022, பிரான்சில் மிக அதிக வெப்பமான ஆண்டாக கருதப்படும் நிலையில், இந்த ஆண்டும் வெப்பத்தை எதிர்கொள்ள மக்கள் திணறிவருகிறார்கள்.
மிக அதிக வெப்பநிலையும், குறைவான மழையும் நாடு முழுவதும் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும், சுமார் 300,000 பேர் தண்ணீர் விநியோகத்தில் பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள். 67 பகுதிகளுக்கு டாங்கர் லொறிகள் மூலம் தண்ணீர் விநியோகிகக்பட்டுவருகிறது, 18 பகுதிகளுக்கு போத்தல் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
Daniel Cole/Copyright 2023 The AP. All rights reserved
இந்நிலையில், 2022ஆம் ஆண்டின் குளிர்காலம் மிகவும் வறண்டதாக இருந்ததால், 2023இன் வறட்சி பிரச்சினை 2022ஐவிட மேலும் மோசமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Daniel Cole/Copyright 2023 The AP. All rights reserved
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |