தெற்கு பிரான்சில் கடும் வெப்பம், அனல் காற்று: வேகமாக பரவும் காட்டுத்தீ: வெளியேறும் மக்கள்
தெற்கு பிரான்சில் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் காட்டுத்தீ
தெற்கு பிரான்ஸ் பகுதியில் நிலவி வரும் அதீத வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் பிரான்சின் 30க்கும் மேற்பட்ட பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
காட்டுத்தீயின் தீவிரத்தன்மை காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாறியுள்ளனர்.

மேலும் இந்த காட்டுத்தீ காரணமாக போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Béziers மற்றும் ஸ்பெயின் எல்லைக்கு இடையில் உள்ள A9 நெடுஞ்சாலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தீவிரமடையும் மீட்புப் பணிகள்
தீயை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 2000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள், வான்வழி தீயணைப்பு விமானங்கள் ஆகியவை மூலம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 1ம் திகதி ஹெரால்ட் பகுதியில் இந்த காட்டுத்தீயானது தொடங்கிய நிலையில், அப்பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.
மேலும் ஆட் மாவட்டத்திலும் காட்டுத்தீ காரணமாக மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |