சிறார் முகாமில் நடந்த கொடூர சம்பவம்... பிரித்தானிய இளவரசி கேட் உருக்கமான பதிவு
பிரித்தானியாவின் Southport பகுதியில் இரு சிறார்கள் மரணமடைய காரணமான கொடூர சம்பவம் குறித்து இளவரசி கேட் மற்றும் வில்லியம் தம்பதி உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
வேல்ஸ் இளவரசி கேட்
Merseyside பகுதியில் நடத்தப்பட்ட சிறார்களுக்கான கோடைகால முகாமில் நடந்த தாக்குதலில் 6 சிறார்கள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவத்தில் 17 வயது சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த நிலையில், நடந்த சம்பவம் தொடர்பில் வேல்ஸ் இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியம் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஒரு பெற்றோராக நடந்த சம்பவத்தை தங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அன்பும், பிரார்த்தனைகளும் செலுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்ட அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள கேட் - வில்லியம் தம்பதி, எப்போதெல்லாம் நமது சமூகம் உங்களின் தேவையை நாடியதோ, அப்போதெல்லாம் இரக்கம் மற்றும் தொழில் நேர்த்தியை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியா மொத்தம்
பகல் 11.50 மணியளவிலேயே தக்குதல் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிசார், சம்பவயிடத்தில் பலர் காயங்களுடன் காணப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
Cardiff பகுதியில் பிறந்து லங்காஷயரில் உள்ள பாங்க்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ள 17 வயது சிறுவனை இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்துள்ளனர். பிரித்தானிய மக்களை நடுங்கவைத்துள்ள இச்சம்பவம் தொடர்பில் சார்லஸ் மன்னரும் ராணியாரும் தங்கள் அதிர்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், பிரித்தானியா மொத்தம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. மரணமடைந்த இரு சிறார்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |