சிறை காவலாளி மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சவுத்போர்ட் கொலையாளி: குவியும் புதிய குற்றச்சாட்டுகள்
Southport Killer hurled boiling water at prison officer: சிறை அதிகாரிகளை தாக்கியதாக சவுத்போர்ட் கொலையாளி மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் கொலையாளி மீது புதிய குற்றச்சாட்டு
சவுத்போர்ட் நகரில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆக்செல் ருடாகுபனா (Axel Rudakubana) என்ற ஆயுள் தண்டனை கைதி சிறை அதிகாரிகளை தாக்கிய புதிய குற்றச்சாட்டின் கீழ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக 20 வயது ஆக்செல் ருடாகுபனா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் மீது பல்வேறு புதிய குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக மே 6ம் திகதி செய்தித்தாளை வழங்க மறுத்த பெண் காவல் அதிகாரி மீது திரவத்தை வீசியது, மே 8ம் திகதி ஆண் சிறை அதிகாரி மீது கொதிக்கும் நீரை சர்க்கரை கலந்து வீசியது, அக்டோபர் 28ம் திகதி மற்றொரு காவலாளி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் ஜூன் 15ம் திகதி அவருடைய அறையில் கூர்மையான கல் துண்டுகளை மறைத்து வைத்திருந்தது போன்றவை தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், காவல் அதிகாரிகள் தன்னுடைய உணவில் விஷம் கலப்பதாக நீதிமன்ற விசாரணையில் ஆக்செல் ருடாகுபனா தனது தரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை மாஜிஸ்திரேட் பால் கோல்ட்ஸ்பிரிங் உத்தரவிட்டுள்ளார்.

ஆக்செல் ருடாகுபனா முந்தைய குற்றங்கள்
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி சவுத்போர்ட் ஹார்ட் ஸ்பேஸ் ஸ்டூடியோவில் ஆக்செல் ருடாகுபனா நடத்திய தாக்குதல் அலிஸ் டா சில்வா அகுயார் - 9, பெபே கிங் - 6, மற்றும் எல்சி டாட் ஸ்டான்கோம்ப் - 7 என்ற 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் இந்த கொலை குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்ட பிறகு ஜனவரி 2025ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு குறைந்தபட்சம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.