பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது

Crime England
By Arbin Jul 30, 2024 04:32 PM GMT
Report

பிரித்தானியாவில் Southport பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் பிள்ளைகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பலர் கண்ணீர் அஞ்சலி

குறித்த அப்பாவி பெண் பிள்ளைகள் தொடர்பில் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் அந்த மூவரின் பெயர் வெளியிடப்பட்டது.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது | Southport Stabbing Named Three Girls

6 வயதேயான Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோரே Merseyside பகுதியில் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் மூவருமே கோடைகால விடுமுறை முகாமில் கலந்துகொண்ட போது கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்கள்.

முதலில் Alice என்பவரின் குடும்பத்தினரே காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவலை உறுதி செய்துள்ளனர். பின்னர் மேலும் இருவரது தகவல் வெளியானது.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது | Southport Stabbing Named Three Girls

நேற்றைய சம்பவத்தில் மொத்தம் 8 சிறார்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதில் ஐவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடன் மேலும் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

கைதான 17 வயது சிறுவன்

அதில் ஒருவர் 35 வயதான ஆசிரியர் Leanne Lucas. இவரே சிறார்களை காப்பாற்ற போராடியவர் என கூறப்படுகிறது. இன்னொருவர் 63 வயதான Jonathan Hayes. இவரும் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளார்.

சவுத்போர்ட் பகுதியில் Merseyside அருகே சிறார்களுக்காக கோடைகால முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் டசின் கணக்கான சிறார்கள் கலந்துகொண்டுள்ளனர். Taylor Swift பாணி யோகா மற்றும் நடன வகுப்புகள் என்பதால் சிறார்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது | Southport Stabbing Named Three Girls

பகல் 11.50 மணியளவில் திடீரென்று முகாம் வளாகத்தில் நுழைந்த அந்த நபர், சிறார்கள் மீது சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான். இந்த சம்பவத்தில் கைதான 17 வயது சிறுவனிடம் பொலிசார் விசாரணை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது 25 சிறார்கள் அந்த முகாமில் இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. முகத்தில் மாஸ்க் அணிந்து, டாக்ஸி சாரதிக்கு பணம் தர மறுத்து, தப்பியோடிய நபராக இருக்கலாம் தாக்குதலில் ஈடுபட்டவர் என்றும் அப்பகுதியில் உள்ள சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US