நாட்டையே உலுக்கிய Southport கத்திக்குத்து: டவுனிங் தெரு வாசலில் போராட்டக்காரர்கள் அத்துமீறல்
பிரித்தானியாவில் டவுனிங் தெருவின் வாசல்கள் மீது எரிப்புகள்(Flares) வீசப்பட்டதால் போராட்டக்காரர்களுடன் பொலிஸார் மோதலில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்
பிரித்தானியாவில் Southport பகுதியில் நேற்று நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில் சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட 6 வயது Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
அத்துடன் 8 சிறுவர்கள் வரை காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் 5 பேர் மிகவும் மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ரூ.110 க்கு ஒரு முத்தம்..!சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான வியாபாரம்
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சாலைகளில் பெரும் திரளாக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் வன்முறை வெடித்தது.
பட்டப்பகலில் Southport-ல் Merseyside பகுதியில் சிறுவர்கள் மீது நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தால் நாடே ஸ்தம்பித்துள்ளது.
டவுனிங் தெரு வாசலில் போராட்டக்காரர்கள்
இந்நிலையில் Southport பகுதியில் நடந்த கத்திக்குத்து மற்றும் வன்முறையை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் முக்கியமான டவுனிங் தெருவின் வாசலின் மீது எரிப்புகளை(Flares) வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
சில எதிர்ப்பாளர்கள் “பிரித்தானியாவை ஆட்சி செய்”, “குழந்தைகளை காப்பாற்று” , “படகுகளை நிறுத்து” என கூவி கோஷமிட்டதோடு, பொலிஸார் உத்தரவை மீறி நடைபாதைக்கு எதிரே செல்ல முயற்சித்தனர்.
சிலர் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள வின்ஸ்டன் சர்ச்சில் சிலையின் மீது எரிப்புகளை வீசி எறிந்தனர்.
இது தொடர்பாக வெளியான புகைப்படம் ஒன்றில், குறைந்தது 5 பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை தரையுடன் தாழ்த்தி கட்டுப்படுத்தி வைத்து இருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |