நாவூறும் சுவையில் மீல்மேக்கர் சுக்கா.., எப்படி செய்வது?
மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.
மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீல்மேக்கர் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி விதை- 2 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்- ஸ்பூன்
- சீரகம்= 1 ஸ்பூன்
- பட்டை- 1 ஸ்பூன்
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 2
- காய்ந்த மிளகாய்- 5
- சோயா- 1 கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- தக்காளி- 1
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மீல்மேக்கர் சேர்த்து அதனுடன் சுடுதண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் கொத்தமல்லி விதை, மிளகு, வெந்தயம், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேயில்லை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கிளறி 10 நிமிடம் வதக்கவும்.
இறுதியாக இதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மீல்மேக்கர் சுக்கா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |