Soya Cutlet: எச்சில் ஊறும் சுவையில் மீல்மேக்கர் கட்லெட்: ரெசிபி இதோ
சைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர்.
மீல்மேக்கர் வைத்த பலவிதமான உணவுகள் செய்யலாம், அதில் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர் கட்லெட்.
இந்த மீல்மேக்கர் கட்லெட்டை சுலபமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீல்மேக்கர்- 2 கப்
- பொட்டுக்கடலை- ¼ கப்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- சிக்கன் மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 3
- புதினா- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- பிரட்- 7
- கார்ன் ப்ளார்- 1 ஸ்பூன்
- மைதா- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கர் எடுத்து அதில் சுடுதண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு பிழிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் பொட்டுக்கடலை மா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதனை கட்லட் வடிவத்தில் தட்டி வைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் பிரட் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து வாணலில் மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் கார்ன் ப்ளார் மற்றும் மைதா சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கட்லட்டை மைதா கலந்த தண்ணீரில் நனைத்து பிரட் துகளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான மீல்மேக்கர் கட்லெட் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |