பார்த்தாலே நாவூறும் Soya Roast! இப்படி செய்தால் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது
சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த புரதச்சத்து நிறைந்த உணவு சோயா மீட் அல்லது மீல் மேக்கர்.
இதில் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன, இதயநோய், பக்கவாதம் உட்பட பல நோய்களின் தீவிரத்தையும் குறைப்பதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கொண்டு காரசாரமான சோயா கறி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோயா மீட் - 1 1/2 கப்
வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 5
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தாளிக்க
Getty/Thinkstock
மசாலா பொருட்களுக்கு
சீரகம்- 1 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
மல்லி- 1 டீஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய்- 4
பட்டை- சிறிது
மிளகாய் வத்தல்- காரத்திற்கு ஏற்ப
உலர்ந்த தேங்காய்- 2 டீஸ்பூன்
மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் நன்றாக வறுத்தெடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்ததும் சோயா மீட்டுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரை ஊற்றவும், இதன் பின்னர் தண்ணீர் இல்லாதவாறு சோயா மீட்டை பிழிந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
இதனுடன் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு வதக்கியதும், மசாலா பவுடரை சேர்க்கவும்.
இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும், இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சோயா மீட்டை சேர்க்கவும்.
அப்படியே 3 முதல் 5 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான Soya Roast தயார்!!!
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் மணம் சுண்டி இழுக்கும்!!!!