பாடகர் SPB நினைவிடத்தில் எழுதியிருக்கும் அந்த வார்த்தைகள் - கண்கலங்க வைத்த தருணம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகள் அங்கு எழுதப்பட்டுள்ளது.
பாடகர் SPB
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உலகளவில் வைத்திருந்தார்.
இவருடைய பாடலை கேட்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் திரைப்படத்திற்காக பாடியுள்ளார்.
இவர் தனது ரசிகர்களால் பாடும் நிலா என்று அழைக்கப்பட்டு, 16 இந்திய மொழிகளில் இளையராஜா முதல் இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர் வரையில் உள்ள அனைவரது இசையிலும் இவர் பாடியுள்ளார்.
அதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது நினைவிடத்தில் ஒரு சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தில் எழுதியிருக்கும் அந்த வார்த்தைகள்
திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு நினைவு இல்லமும் அமைக்கப்பட்டிருந்தது.
நினைவிடத்தில் அமைக்கப்பட்ட சிலைகள் புதுச்சேரி ஆரோவில் சஞ்சீவி நகரில் உள்ள சிற்பக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
அது 6 டன் எடையுள்ள ஒரே பாறையில் அவரின் முகம் பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் தான் அவர் அடிக்கடி பயன்படுத்தும், “சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவ” என்ற மந்திரம் செதுக்கப்பட்டுள்ளது. இதை மாத்திரம் 6 சிற்பிகள் சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
மேலும் இதை பார்த்த இணையவாசிகள் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைத்து கண்கலங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |