Google - SpaceX இடையே 30 பில்லியன் டொலர் AI ஒப்பந்தம் கையெழுத்து
SpaceX நிறுவனம், Google நிறுவனத்துடன் 30 பில்லியன் டொலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு (AI) உட்கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2026 அக்டோபரில் தொடங்கி 2029 வரை நீடிக்கும்.
Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Google மாதம் 920 மில்லியன் டொலர் செலுத்தி, SpaceX வழங்கும் NividiaGPU அடிப்படையிலான கணினி வளங்களை பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் கூகுளின் AI சேவைகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Google தனது Gemini AI தளத்துடன் தொடர்புடைய நிறுவன சேவைகளை விரிவாக்கும் முயற்சியில், மிகப்பெரிய கணினி திறன் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
SpaceX நிறுவனம் விண்வெளி துறையைத் தாண்டி, AI உட்கட்டமைப்பில் முக்கிய பங்காற்றும் நோக்கில், பெரிய அளவிலான தரவு மையங்கள் மற்றும் உயர் செயல்திறன் கணினி வளங்களில் முதலீடு செய்துவருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் Google, ஆயிரக்ணக்கான NividiaGPU-க்கள், CPU-க்கள், Memory அமைப்புகள் மற்றும் AI வெளிப்பாடுகளை தேவையான பிற உபகரணங்களைப் பெறும்.
தொழில்நுட்ப உலகில் AI கணினி வளங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், SpaceX-Google ஒப்பந்தம் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |