நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள்
SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூடுதலாக 3 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஒப்பந்த திருத்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.
இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த திருத்தத்தின் மூலம் நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கூட்டுப்பணி இந்த புத்தாண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ் Crew-15, Crew-16 மற்றும் Crew-17 ஆகியவை புதிய பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாசாவின் வணிக விண்வெளி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 17வது விண்வெளி பயணம் இதுவாகும்.
விண்கலத்தை விண்ணில் செலுத்துவது, பூமியின் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இயக்குவது மற்றும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகியவை ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய பணிகள் ஆகும்.
