நான்கு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ், நாசாவுடன் இணைந்து, சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reuters
SpaceX Falcon 9 விண்கலம்
இந்தக் குழுக்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும். இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில் க்ரூ-6 அனுப்பப்பட்டது. க்ரூ-6-ன் பணி காலம் முடிவடைவதால், க்ரூ-7 விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 விண்கலம் Crew-7 உடன் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் நான்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Eva Marie Uzcategui/Getty Images
இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் Crew captain ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் மற்றும் விமானி ஆண்ட்ரியாஸ் மொகென்சன், ஜப்பான் விண்வெளி ஆய்வு ஏஜென்சி விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் இருந்தனர்.
Terry Renna/AP Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
SpaceX, NASA, four astronauts, United States, Russia, Japan, SpaceX spacecraft launched with four astronauts