ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் இன்ஜின் கோளாறு: பயங்கர வெடிப்புடன் பசிபிக் கடலில் தரையிறக்கம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் பசிபிக் பெருங்கடலில் பெரிய வெடிப்பு சத்தத்துடன் தரையிறங்கியுள்ளது.
வெற்றிகரமான விண்வெளி பயணம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியுள்ளது.
இந்த விண்வெளி பயணம் சுமார் 10 மணி நேரங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு மட்டும் பூமியைச் சுற்றி வலம் வந்து பின்னர் பூமியில் தரையிறங்கியது.

3 மணி நேரம் மட்டுமே இந்த பயணம் நீடித்த போதிலும் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் 26 அதிநவீன ஸ்டார்லிங்க் வி3(Starlink V3) செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congrats @SpaceX! Gorgeous launch, getting Ship to orbit and managing every step in a safe, responsible, and especially inspirational way. @NASA, along with the rest of the interested public, is excited to help where we can and for Starship missions to become routine! https://t.co/6DSKmMUT4T
— NASA Administrator Jared Isaacman (@NASAAdmin) September 28, 2026
ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 3 இன்ஜின்களில் ஒரு இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயண நேரம் குறைக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
வடக்கு பசிபிக் பிராந்தியத்தில் தரையிறக்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் மிகப்பெரிய வெடிப்பு மற்றும் பயங்கர சத்தத்துடன் வெற்றிகரமாக தரையிறங்கியது.