தனது அணிக்கு எதிராக கோல் அடித்த வீரர்! இத்தாலியை 0-1 என வீழ்த்திய ஸ்பெயின்
யூரோ 2024 போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
ஸ்பெயின் - இத்தாலி
Gelsenkirchen நகரின் Veltins-Arena மைதானத்தில் நடந்த யூரோ 2024 கால்பந்து போட்டியில் ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதின.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
ஆட்டத்தின் 55வது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் வில்லியம்ஸ் கிராஸ் கிக் செய்த பந்தை, இத்தாலி வீரர் ரிக்கார்டோ காலபியோரி தடுக்க முயற்சித்தார்.
சுயகோல்
ஆனால், அது அவரின் காலில் பட்டு வலைக்குள் சென்று சுயகோல் (Own goal) ஆனது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் செய்த கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. ஸ்பெயின் அணிக்கு இது இரண்டாவது வெற்றி மற்றும் இத்தாலிக்கு இது முதல் தோல்வி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |