10-வது நிமிடத்தில் யமால் அடித்த முதல் கோல்., சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026, குழு-H போட்டியில் ஸ்பெயின் அணி சவுதி அரேபியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
போட்டியின் 10வது நிமிடத்தில் இளம் வீரர் லமின் யமால் (Lamine Yamal) தனது முதல் உலகக் கோப்பை கோலை அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து மிக்கேல் ஒயார்சபல் (Mikel Oyarzabal) இரண்டு கோல்கள் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். முதல் பாதி முடிவதற்குள் ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்தது.
இரண்டாம் பாதியில், சவுதி டிபென்ஸ் வீரர் ஹசன் அல்தம்பக்தியின் தவறான தடுக்கல் காரணமாக கோல் விழுந்தது. இதனால் ஸ்பெயின் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, “முந்தைய போட்டியில் ஏற்பட்ட குறைகளை சரி செய்தோம். இன்று வீரர்கள் அதிக ஆற்றலுடன் விளையாடினர்” என்று தெரிவித்தார்.
இந்த வெற்றியால் ஸ்பெயின் 4 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. சவுதி அரேபியா 2 போட்டிகளில் 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. குழுவின் மற்ற அணிகள் கேப் வெர்டே மற்றும் உருகுவே மியாமியில் மோத உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |