ரூ.1,300 கோடி இழப்பீடு... காதலி தொடுத்த வழக்கை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தை நாடிய மன்னர்
முன்னாள் காதலி தொடுத்த 1,300 கோடி ரூபாய் இழப்பீட்டு கோரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னர்.
126 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு
பிரித்தானியாவில் வசிக்கும் டென்மார்க் தொழிலதிபரான Corinna zu Sayn-Wittgenstein-Sayn என்பவர் தமது முன்னாள் காதலரான மன்னர் ஜுவான் கார்லோஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
@getty
2014ல் மன்னர் பதவியை துறந்துள்ள ஜுவான் கார்லோஸ் தமக்கு ஏற்படுத்திய தனிப்பட்ட காயங்களுக்காக 126 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோரியிருந்தார். குறித்த வழக்கில், மன்னர் ஜுவான் கார்லோஸ் தமக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் எனவும், இதற்கென ஸ்பெயின் நாட்டின் உளவுத்துறையை பயன்படுத்தி, துன்புறுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை 85 வயதான ஜுவான் கார்லோஸ் மொத்தமாக மறுத்துள்ளார். மட்டுமின்றி, இழப்பீடு கோரும் மனுவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
@epa
Sayn-Wittgenstein-Sayn தரப்பில் வாதிட்ட சட்டத்தரணிகள், போதிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கோரும் மனுவை ரத்து செய்வது முறையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜுவான் கார்லோஸ் மன்னர்
மன்னர் ஜுவான் கார்லோஸ் உடன் ஐந்து ஆண்டு காலம் உறவில் இருந்துள்ளார் Sayn-Wittgenstein-Sayn. ஆனால் 2012ல் லண்டனில் உள்ள Connaught ஹொட்டலில் ஸ்பெயின் உளவுத்துறை அதிகாரிகள் தம்மை சந்தித்து, மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் 2014ல் ஜுவான் கார்லோஸ் மன்னர் பொறுப்பில் இருந்து விலகி, தமது மகனை அரியணைக்கு தெரிவு செய்தார். லண்டனில் உளவுத்துறை அதிகாரிகள் சந்திப்பு நடத்திய அதே வேளையில், மொனாக்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும், சுவிட்சர்லாந்தில் உள்ள வில்லாவும் சேதப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@Alamy
மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் உள்ள வில்லாவில் பிரித்தானிய இளவரசி டயானாவின் மரணம் தொடர்பான நூல் ஒன்றை விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும், இது மறைமுகமான கொலை மிரட்டல் எனவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |