கேப்டன் மொராட்டா காயம்! Euro 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
யூரோ கால்பந்து 2024-ன் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்று இருக்கும் நிலையில், அணியின் கேப்டன் மொராட்டா-வுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின்
யூரோ கால்பந்து 2024-ன் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி யூரோ 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
??? One of the security guards at the stadium appears to have injured Álvaro Morata last night. The player continued limping and showed signs of discomfort after the incident…pic.twitter.com/5NAOYe0e7T
— Atletico Universe (@atletiuniverse) July 10, 2024
பாதுகாப்பு பணியாளருடன் மோதல்
ஸ்பெயின் அணி யூரோ 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவர்களது கேப்டன் அல்வாரோ மொராட்டா(Alvaro Morata) காயமடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, ஸ்பெயின் வீரர்கள் ரசிகர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்த போது, ஒரு ரசிகர் அவர்களுடன் செல்பி எடுக்க முயன்றார்.
இதனை தடுக்க முயன்ற பாதுகாப்பு பணியாளர் தவறி விழுந்து, தவறுதலாக மொராட்டாவின் முழங்காலில் மோதினார்.
இதில் ஸ்பெயின் கேப்டன் மொராட்டா-வுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போட்டிக்கு பிறகு மொராட்டா கால்களை பிடித்துக் கொண்டு தள்ளாடிக் கொண்டிருக்கும் காட்சியில் வீடியோவில் பதிவாகியுள்ளது.
பயிற்சியாளர் தகவல்
இந்த மோதல் காரணமாக மொராட்டாவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுயண்டே எச்சரிக்கையுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"நாளை தான் பார்க்க வேண்டும்," "வலி இருக்கிறது, ஆனால் பெரிதாக எதுவும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
மொரடாவின் காயம் குறித்த அச்சங்கள் இருந்தாலும், ஸ்பெயின் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |