FIFA உலகக்கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த ஸ்பெயின்! கோல் மழையால் காலியான கோஸ்டாரிகா
கத்தார் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்திய இமாலய வெற்றி பெற்றது.
100வது கோல்
அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டரிகா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேனி ஒல்மோ கோல் அடித்தார். இது உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணியின் 100வது கோல் ஆகும்.
இதன்மூலம் உலகக்கோப்பையில் 100 கோல்கள் அடித்த 6வது அணி என்ற இமாலய சாதனையை ஸ்பெயின் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.
மார்கோ அசென்சியோ (21வது நிமிடம்), பெர்ரன் டோரஸ் (31வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலை வகித்தது.
இமாலய வெற்றி
இரண்டாவது பாதியில் ஸ்பெயினின் வேகத்தை கோஸ்டாரிகா அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் பெர்ரன் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
@ AP pic
கேவி 74வது நிமிடத்திலும், கார்லோஸ் சோலெர் 90வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஸ்பெயின் அணியின் அல்வரோ மொரட்டா கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கோஸ்டாரிகா அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஸ்பெயின் 1045 முறை பந்தை பாஸ் செய்தது.
உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணிகள்:
- பிரேசில் (229)
- ஜேர்மனி (227)
- அர்ஜென்டினா (138)
- இத்தாலி (128)
- பிரான்ஸ் (124)
- ஸ்பெயின் (106)