உலகக் கோப்பையில் முதல்முறையாக பங்கேற்ற அணி., ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் திணறிய ஸ்பெயின்
அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை போட்டியில், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வேற ஸ்பெயின், உலகக் கோப்பையில் முதல் முறையாக பங்கேற்ற கேப் வெர்டேவை (Cape Verde) எதிர்த்து ஒரு கோல் கூட அடிக்காமல், 0-0 என்ற அதிர்ச்சிகரமான சமனில் முடித்தது.
பார்சிலோனா நட்சத்திரம் லாமின் யமல் (Lamine Yamal), காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களமிறங்கினார். ஆனால் அவரது ஆட்டமும் ஸ்பெயினுக்கு பலனளிக்கவில்லை.

அதேபோல், நிக்கோ வில்லியம்ஸ் (Nico Williams) காயம் காரணமாக 87-வது நிமிடத்தில் மட்டுமே களமிறங்கினார்.
முழு ஆட்டத்திலும் ஸ்பெயின் பந்தை அதிகம் கட்டுப்படுத்தினாலும், கேப் வெர்டேவின் உறுதியான பாதுகாப்பை உடைக்க முடியவில்லை.

முதல் பாதியில் ஃபெரான் டோரஸ் (Ferran Torres) அடித்த பந்தை கம்பி தடுத்தது. தொடர்ந்து கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா பல முக்கிய சர்வீஸ்களை செய்து அணியை காப்பாற்றினார்.
இறுதி நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் டினி போர்ஜஸ் அடித்த தலைப்பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் யுனாய் சைமன் தடுத்ததால், கேப் வெர்டே வரலாற்று வெற்றியை தவறவிட்டது.
உலக தரவரிசையில் 67-வது இடத்தில் உள்ள கேப் வெர்டே, 5 இலட்சம் மக்கள்தொகையுடன் உலகக் கோப்பையில் முதல் முறையாக பங்கேற்று, தங்கள் நாட்டை பெருமைப்படுத்தியது.
ஸ்பெயின் அடுத்த போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொள்ள உள்ளது. கேப் வெர்டே, மியாமியில் உருகுவையை எதிர்கொள்ளும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |